What are your looking for ?
தமிழக அரசு சார்பில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடுவது குறித்து பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையின்படி, ஜெ.சி.டி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வரின் வழிகாட்டுதலுக்கிணங்க, கல்லூரியின் தமிழ்மன்றம் சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டி கல்லூரி வளாகத்தில் 24/11/23 அன்று நடைபெற்றது. இப்போட்டியில் பங்குகொண்டு ,அனைத்துத் துறைகளில் இருந்தும் மாணவ மாணவியர் பின்வரும் தலைப்புகளில் பேசினர்.
1.கலைஞரும்-தமிழும்
2.கலைஞரும்-சமுகநீதியும்
3.கலைஞரும்- அரசியல் அதிகாரமும்
4.கலைஞரும்-பெண்ணுரிமையும்
5.கலைஞரும்-அறிவியல் தொழில்நுட்பமும்